21 மாதங்களுக்கு பிறகு திருநள்ளாறு நளன் குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2021 05:12
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் நளன்குளத்தில் 21மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் புனித நீரில் குளித்துவிட்டு பகவனை தரிசனம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்திப் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனால் பகவானை தரிசிக்க நாட்டில் பல்வேறு பகுதியிலிந்து தினம் பக்தர்கள் வருகின்றனர். இதில் சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக நளன் குளத்தில் புனித நீராடிவிட்டு குளக்கரையில் உள்ள விநாயகரை வணக்கி தங்கள் தேஷம் கழிப்பதற்கு பக்தர்கள் சிதர் தேங்காய் உடைத்து விட்டு பின்னர் பகவானை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று காரணமாக நளன்குளத்தில் புனித நீராட கோயில் நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனால் குளத்தில் உள்ள நீரை வெளியோற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 21மாதங்கள் பக்தர்கள் குளத்தில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர் கனமழையால் நளம்குளத்தில் மழைநீர் நிரம்பியது. இன்று சனிக்கிழமை என்பதால் நளன்குளத்தில் பக்தர்கள் புனித நீரில் நீராடி வருகின்றனர். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் நளன்குளத்தில் உள்ள புனித நீராடிவிட்டு பின்னர் பகவானை தரிசனம் மேற்கொண்டனர். நோய் தொற்று காரணமாக கடந்த 21மாதங்களுக்கு பிறகு குளத்தில் தேங்கியுள்ள நீரில் தங்கள் வேண்டுதலை பக்தர்கள் குளித்துவிட்டு பகவானை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.