பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
கரூர்: கரூர் மாவட்ட, பஞ்சாயத்து கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் கூட்டம் தாந்தோணி ஒன்றிய அமைப்பாளர் மனோகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தை தமிழக அரசு மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுத்தல், பூசாரி களுக்கு ஓய்வூதியத்தை 2,000 ரூபாயாக உயர்த்துதல், கரூரில் நடைபெறும் பூசாரிகள் பேரவை மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்ளுதல், மணவாடி பஞ்சாயத்தில் உள்ள கிராமக்கோவிலுக்கு இலவச மின்சாரம் வழங்குதல், கத்தாளப்பட்டியில் உள்ள முளச்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வி.ஹெச்.பி., மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செயலாளர் சுரேஷ், பூசாரி பேரவை மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், இணை அமைப்பாளர் பிச்சை முத்து, கரூர் நகர அமைப்பாளர் ராம்சங்கர், ஆன்றோர் பேரவை அமைப்பாளர் பெரியசாமி, மணவாடி பஞ்சாயத்து அமைப்பாளர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.