பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ காகன்னைஈஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வரும் எட்டாம் தேதி நடக்கிறது. பிரசித்திப்பெற்ற எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் 75 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஸ்ரீ காகன்னைஈஸ்வரர் கோ வில் புதிதாக கட்டப்பட்டுள்ளது . இதன் கும்பாபிஷேக விழா வ ரும் எட்டாம் தேதி காலை ஒன்பது மணியளவில் நடக்கிறது. விழாவையொட்டி ஆறாம் தேதி காலை எட்டு மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. மாலை ஐந்து மணியளவில் முதல் மற்றும் 2ம் யாகசாலை பூஜையும், தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏழாம் தேதி காலை ஐந்து மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மாலை ஐந்து மணியளவில் நான்காம் கால யாகசாலைபூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. வரும் எட்டாம் தேதி காலை ஒன்பது மணியளவில் கோபுர கலச கும்பாபிஷேகமும், 9.30 மணியளவில் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திரதானம் வழங்குதல் நடக்கிறது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர்கள் செந்தில், குணா, ஐ.ஏ.எஸ், அதிகாரி பெருமாள், எம்.பி., இளவரசன், எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தாளாளர் சிவசுப்ரமணியம், சிங்கப்பூர் ரத்தினவேல், திட்டக்குடி ராஜன் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவினையொட்டி எட்டாம் தேதி இரவு ஏழு மணியளவில் கங்கை அமரனின் இசைகச்சேரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மகாசித்தர்கள் டிரஸ்ட் நிறுவனர் அன்னை ராஜ்குமார் ஸ்வாமிகள், இயக்குனர் ரோகினி மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.