இன்று, போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2012 11:07
போடி:போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடக்கிறது. போடி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் புதிப்பிக்கப்பட்டும்,ஆலயம் கட்டுவது, சிலைகள் புதுப்பிக்கும் பணி முடிந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், சாந்தி ஹோமம், யாக வேள்விகள் நடத்தப்பட்டு கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று காலை 9 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள்,பழநி முருகன் கோயில் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடக்கிறது.திருப்பணிக்கமிட்டி தலைவர் பழனிராஜ் மற்றும் கமிட்டியினர், தக்கார் சுதா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.