பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
திருநெல்வேலி : குன்னத்தூர், சங்கானி கோதபரமேஸ்வரர், சிவகாமி அம்பாள் கோயில் வருஷாபிஷேக விழா நாளை(6ம் தேதி) காலை நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நவ கைலாயங்களில் ஒன்றாகவும், ராகு ஸ்தலமாகவும் விளங்கும் குன்னத்தூர் கங்கானி கோத பரமேஸ்வரர், சிவகாமி அம்பாள் கோயில் வருஷாபிஷேக விழா நாளை(6ம் தேதி) நடக்கிறது. வருஷாபிஷேக விழா காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார,ஆராதனைகளும், 10 மணிக்கு விமான அபிஷேகமும், ராகு காலமான 10.30 மணி முதல் 12 மணிக்குள் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டி சார்பில் காசி விஸ்வநாதன், நவ்ராஜ், சங்கர், கணேசன், பாலு, குன்னத்தூர் முருகன், வெள்ளப்பாண்டியன், பேராட்சி உட்பட பலர் செய்து வருகின்றனர்.