பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
திருநெல்வேலி : பாளை., மேலவாசல் பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(5ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. பாளை., மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதிஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது. 2ம் தேதி நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, 2ம் கால யாக சாலை பூஜை, 3ம் கால யாக சாலை பூஜை மற்றும் பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 4ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, ஐந்தாம் கால யாக சாலை பூஜை,திரவ்யாகுதியும், இரவு யந்தரதானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிம்பசுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம் போன்றவை நடந்தது. இன்று(5ம் தேதி) காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6ம் கால யாக சாலை பூஜையும், 9.30 மணிக்கு நாடி சந்தானம், ஸ்பர்ஸாகுதியும், 10.45 மணிக்கு யாத்ர தானம், கும்பம் எழுந்தருளல் நடக்கிறது. 11 மணிக்கு விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க பிரசன்ன விநாயகர், வள்ளி,தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி வீதியுலா நடக்கிறது. அன்னதானம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மதியம் 12 மணிக்கு சுமார் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னாதனம் வழங்க ராமசாமி கோயில் திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.