குற்றாலம்: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு வேத மந்திரங்களுடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா இன்று (11ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. குற்றாலம் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள் கோயில் சித்திர சபையில் உள்ள நடராசபெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்க மார்கழி திருவாதிரை திருவிழா இன்று காலை வேத மந்திரங்களுடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்ளில் சுவாமி அம்பாள் உலா நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.