பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
கழுகுமலை : கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் கோலாகலமாக நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தி ன் சிறந்த சுற்றுலாத்தலமான கழுகுமலை நகருக்கு பெரு மை சேர்ப்பதில் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் பெரும்பங்கு வகிக்கிறது. மே லும் சுற்றுலாத்தலத்தின் ஆ தாரமாக விளங்கும் மலைக்குன்றின் அடிவாரத்தில் அ மைந்து தமிழகத்தின் தென்பழனி என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறது. க ழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் ஏராளமான நடந்து வருகின்றன. இதில் ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி நாளன்று நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் கழுகுமலை மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அடுத்தாற்போல் அதிகம் பக்தர்கள் விரும்பும் புனிதத்தலமாக கழுகுமலை திகழ்கிறது. ஏனெனில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கெ ன்று தனியாக விமானம் இல்லாததாலும், கருவறையை சு ற்றி வந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றாலும் கழுகுமலை மலையை சுற்றி வரவேண்டும். இதனாலேயே கழுகுமலை பவுர்ணமி கிரிவலம் இப்பகுதி பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பு மிகுந்த வழிபாடாக உள்ளது.இந்நிலையில் இம்மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இதையொட்டி கழுகுமலை, குருவிகுளம், சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கழுகாசலமூர்த்தி கோயில் தெற்கு வாசலில் ஒன்று கூடினர். தொடர்ந்து ஹரஹர சங்கரா, சிவசிவ சங்கரா, கழுகுமலை முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கழுகாலமூர்த்திக்கு அரோகரா என்ற பக்த கோஷங்கள் எழுப்பியபடி மேலக்கிரிப்பிரகார வீதி வழியாக மலையை சுற்றி வந்தனர்.நிகழ்ச்சியில் பிரதோஷக்குழு தலைவர் முருகன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.