பதிவு செய்த நாள்
13
டிச
2021
03:12
மதுரை : கிராமக் கோயில் பூஜாரிகளின் மாத ஊக்க தொகை, குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்குகோரிக்கை விடுத்துகிராமக் கோயில் பூஜாரிகள் மதுரை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்,கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் மதுரை மாவட்ட முதல் மாநாடு, கருமாத்துாரில் நேற்று நடந்தது. தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்.
தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிறுவனரும், கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான எஸ். வேதாந்தம் பேசியதாவது:மதமாற்றம் அதிகரித்து வருகிறது. இதனால், இந்துக்களின் சதவீதம் 79 சதவீதமாக குறைந்து விட்டது. 21 சதவீதத்தினர் மாற்று மதம் சென்றுவிட்டனர். மதமாற்றத்தை தடுக்க வேண்டும். தமிழ் கலாச்சாரம், பண்பாடு வளர, கிராமக்கோயில்கள்தான் காரணம். நாட்டின் எல்லையை ராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர். கிராம எல்லைகளை கிராமக்கோயில் பூஜாரிகள் காத்து வருகின்றனர். பூஜாரிகள் மந்திரங்கள் கற்று, அதை பூஜையின்போது கூறினால், மக்கள் மத்தியில் மரியாதை ஏற்படும். அதற்கு பூஜாரிகள் தயாராக வேண்டும். பூஜாரிகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்டப்படிப்பும் படிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் 2 ஆயிரம் ரூபாயாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்./பூஜாரிகள் கடமை/தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்ஆர். கோபால்ஜி பேசியதாவது:தமிழகத்தில் 2 லட்சம் கிராமக் கோயில்கள் உள்ளன. 6 லட்சம் பூஜாரி குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கென்று ஓட்டு வங்கி உள்ளது. ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வது இந்த ஓட்டுகள்தான். இருந்தபோதும், கிராமக் கோயில் பூஜாரிகளின் கோரிக்கைகளை அரசியல்வாதிகள் நிறைவேற்றுவதில்லை.கிறிஸ்துவமத சொத்துக்கள் கிறிஸ்துவ சபைகளிடம் உள்ளது. முஸ்லிம் மத சொத்துக்கள் ஜமாத்திடம் உள்ளன. ஆனால், இந்துமத சொத்துக்கள் அரசிடம் உள்ளது. கோயில் வருவாயை, ஆன்மிகத்துக்கு மட்டுமின்றி வேறு பல பணிகளுக்கும் செலவு செய்கின்றனர். கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் பூஜாரிகளுக்கு இந்த வருவாய், போகவில்லை. இதனால், பூஜாரிகளின் வாழ்வாதாரம் உயரவில்லை.பூஜாரிகள் முன்பைவிட படிப்படியாக முன்னேறியுள்ளனர். இன்னும் முன்னேற வேண்டும். குறிப்பாக மந்திரங்கள் கற்று தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். மந்திரங்கள் கூறி வழிபாடு நடத்தும்போது, பக்தர்களின் மத்தியில் பூஜாரிகளுக்கு மரியாதை உயரும்.மதமாற்றம் தடுப்பது பூஜாரிகளின் கடமை. மதம் மாறியவர்களை தாய் மதத்தில் சேர்க்கும் கடமையும் பூஜாரிகளுக்கு உள்ளது. பூஜாரிகள் ஒரு சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, மதம் மாறிய குடும்பங்களை தாய் மதத்துக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இப்படி, மாதம் ஒரு குடும்பத்தை தாய் மதம் சேர்க்க வேண்டும் என்ற சபதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் ஏராளமான கிராமக் கோயில் பூஜாரிகள் கலந்து கொண்டனர்.மதமாற்ற தடை சட்டம்கொண்டு வர வேண்டும்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:* பூஜாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாக உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி. கிராமக் கோயில் பூஜாரிகளின் மாத ஊக்க தொகை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக்க வேண்டும்.* அறங்காவலர் குழுவில் பூஜாரிகளையும் இணைக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான இடங்களில் அரசு அலுவலகங்கள், கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், புறம்போக்கு நிலத்தில் உள்ள சிறிய கோயில்களுக்கு அந்த கோயில் பெயரிலேயே பட்டா வழங்க வேண்டும். கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.* கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும்.* ஆகமவிதி தெரிந்தவர்களையே அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.* மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.என்பது உட்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.