பதிவு செய்த நாள்
13
டிச
2021
04:12
கோத்தகிரி: கோத்தகிரி ஐயப்பன் திருக்கோவிலில், தாலப்பொலி மகோற்சவம் நடந்தது.விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய பூஜை செண்டை மேளத்துடன் நடந்தது. தொடர்ந்து, கணபதி ஹோமம், உஷ பூஜை இடம்பெற்றது. காலை, 8:00 மணிக்கு, அலங்கார பூஜை, சாமி தரிசனம், 10:00 மணிமுதல் அஷ்டாபிஷேகம், 12:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது.பகல், 1:00 மணிக்கு நடை சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, செண்டை மேளம் முழங்க, நகரின் முக்கிய வீதிகள் வழியாக, தாலப்பொலி ஊர்வலம் நடந்தது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் பங்கேற்றனர்.மாலை, 6:30 மணிக்கு, ஐயனுக்கு மகா தீபாராதனையும், 7:00 மணிக்கு, ஹரிவராசனம் பாடலுக்கு பிறகு, நடை சாத்தப்பட்டது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பன் கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து இருந்தனர்.