திருநெல்வேலி : நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. தாமிரசபா மண்டபத்தில் நடராஜ பெருமானின் திருத்தாண்டவ நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைந்துள்ளது. இங்கு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் காலை மாலை இருவேளைகளிலும் கோவில் பெரிய சபாபதி சன்னதியில் திருவெம்பாவை பாராயணமும் திருநடன தீபாராதனையும் நடைபெற்றது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 9 ம் திருநாள் நள்ளிரவில் தாமிரசபைக்கு நடராஜ பெருமான் எழுந்தருளினார். தொடர்ந்து தாமிரசபையில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஹோமங்களும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து நடராஜருக்கு ஆகுத்ரா அபிஷேகமும் திருவெம்பாவை பாராயணமும் நடைபெற்று திருநடன தீபாராதனை நடைபெற்றது.பின்னர் தாமிரசபா மண்டபத்தில் திருத்தாண்டவ நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்