பதிவு செய்த நாள்
30
டிச
2021
12:12
திருப்பூர்: மங்கலம்ரோடு, பாரப்பாளையம் பகுதியில், மார்கழி மாதம், மகர ஜோதி பக்தர்கள் குழு சார்பில், அன்னதான விழா நடக்கிறது. இந்தாண்டு, 26ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. விழாவின் துவக்கமாக, 26ம் தேதி, திருமுருகன்பூண்டி விவேகானந்த சேவாலயத்தில், அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த, 27ல், 108 திருவிளக்கு பூஜையும், ஐயப்பன் பஜனை, கூட்டு பிரார்த்தனை, ஐயப்பன் ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை , 11:00 மணி முதல், அன்னதானம் வழங்கப்பட்டது. துணைதலைவர் ராஜேந்திரன், அன்னதான குழு தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தனர். தலைவர் வெங்கிடுசாமி, பொருளாளர் ஆடிட்டர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். சத்யா டையிங் காந்திமதி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் . முன்னாள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, பூச்சக்காடு செல்வ விநாயகர்கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். பள்ளி குழந்தைகளுக்கு, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.