சபரிமலை : சபரிமலைக்கு மகரவிளக்கு தரிசன நாளில் பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த சன்னிதானத்தில் உயர்நிலை கமிட்டி இன்று (ஜன.,3) கூடுகிறது. ஜன., 14ல் நடக்கும் மகரவிளக்கு தரிசன முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று காலை சன்னிதான கூட்ட அரங்கில் நடக்கிறது. அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். மகரவிளக்கு தரிசன நாளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், திருவாபரணங்களுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, சன்னிதானத்தில் பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்டவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப் படுகிறது.
18,001 நெய் தேங்காய்: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு பக்தர் 18,001 நெய்த் தேங்காய் அபிஷேகம் செய்கிறார். இதற்காக பம்பையில் நெய்த் தேங்காய்கள் நிறைக்கும் நிகழ்ச்சியை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் துவக்கி வைத்தார். நாளை மறுநாள் இந்த நெய், ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.