ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் பகல்பத்து உற்சவம் துவக்கம்: 13ல் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2022 10:01
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத உற்சவங்களான பகல் பத்து, ராப்பத்து, சொர்க்கவாசல் திறப்பு, எண்ணை காப்பு உற்சவங்கள் இன்று துவங்குகிறது.
இன்று முதல் ஜன., 12 வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. மாலை 4:35 மணிக்கு வேதபிரான் திருமாளிகையில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பச்சை பரத்தலை பார்வையிடும் வைபவத்துடன் பகல்பத்து உற்சவம் துவங்குகிறது. தினமும் காலையில் பகல் பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளல் நடக்கிறது. ஜன., 6ல் பிரியா விடை; ஜன., 7 முதல் 14 வரை எண்ணெய் காப்பு உற்சவம் ஆகியவை நடக்கிறது.ஜன., 13ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7:35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜன., 23 வரை ராப்பத்து உற்சவங்கள் நடக்கின்றன.