பதிவு செய்த நாள்
03
ஜன
2022
12:01
மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்களில் அத்யான உத்ஸவமான பகல் பத்து, ராப்பத்து இன்று (ஜன.,3) - ஜன., 22 வரை நடக்கிறது. ஜன., 13 காலை 7:35 மணி - 8:30 மணி சுவாமிகள் பரமபதவாசலில் எழுந்தருள்வர். கொரோனா பரவல் தடுப்பிற்காக உட்பிரகார புறப்பாட்டில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
காலை நேரம் கள்ளழகர் கருடாழ்வார் சன்னதி எதிரே மண்டபத்தில் எழுந்தருள்வார். திருவாராதனம், சேவாகாலம், கோஷ்டி நடக்கும். ஜன., 13 வைகுண்ட ஏகாதசி அன்று காலை 7:35 மணி - 8:30 மணி சொர்க்வாசல் திறக்கப்பட்டு கள்ளழகர் எழுந்தருள்வார்.வைகுண்ட ஏகாதசி காலை மற்ற 9 நாட்கள் மாலை 5:30 மணி - 6:00 மணி கள்ளழகர் சொர்க்கவல், உட்பிரகாரத்தில் பல்லக்கு, ராப்பத்து 8ம் நாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.
தல்லாகுளம் பெருமாள் கோயிலில் பகல்பத்து 10ம் நாள் மோகன அவதாரத்தில் 16 கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். 10 நாட்களும் உட்பிரகாரத்தில் புறப்பாடு நடக்கும். கொரோனா பரவல் தடுப்பிற்காக உட்பிரகார புறப்பாட்டில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிற நேரம் வழக்கம் போல் தரிசிக்கலாம். அர்ச்சனை, திருமஞ்சனம், அமர்வு தரிசனம் அரசின் உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என கோயில் உதவி கமிஷனர் அனிதா தெரிவித்துள்ளார்.