முள் படுக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2022 12:01
திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவன முத்துமாரியம்மன் கோயிலில் நாகராணி அம்மையார் முள் படுக்கையில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்வாக்கு கூறினார். முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா உற்சவத்தில் நாகராணி அம்மையார் உடை முள், கற்றாழை முள், காட்டு கருவேல முள் உள்ளிட்ட பல்வேறு வகையான முட்களை ஐந்து அடி உயரத்திற்கு பரப்பி அதில் 45 நாட்கள் விரதமிருந்து முள் படுக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவதுடன் குழந்தை பேறு, திருமண வரம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகையான நேர்த்திகடனுக்கு அருள்வாக்கு கூறினார். கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு நிகழ்வில் பங்கேற்றதுடன் முத்து மாரியம்மனையும் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.