சபரிமலை, திருவாவபரண பவனி பயணிப்பதற்கும், மகர ஜோதி தரிசனத்துக்கும் வேகமான முன்னேற்பாடுகள் தொடங்கியது. பந்தளத்திலும், சன்னிதானத்திலும் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவெடுக்கப்பட்டது. வரும் 14–ம் தேதி சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதற்காக 12–ம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது.. திருவாபரணம் பெரும்பாலும் காடு வழியாக கொண்டு வரப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பவனி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று பந்தளத்தில் தேசவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தலைமையில் நடைபெற்றது. இதில் பத்தணந்திட்டை கலெக்டர் டாக்டர் திவ்யா எஸ் அய்யயர், பந்தளம் அரண்மனை பிரதிநிதி சசிகுமார வர்மா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 12–ம் தேதி பகல் ஒரு மணிக்கு பந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரண பவனியில் வருபவர்களுக்கு பாஸ் வழங்கப்படும். கோவி்ட் . திருவாபரணம் தங்கும் இடங்களில் தேவையான கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பவனி தொடர்பான எல்லா ஏற்பாடுகளும் கலெக்டர் தலைமையில் செய்ய இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சன்னிதானத்தில் நடைபெற்ற மகரஜோதி ஆய்வு கூட்டத்தில் ஜோதி தரிசன இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி இந்த ஆண்டு பம்பை ஹில்டாப்பிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு விபத்துக்கு பின்னர் இங்கு ஜோதி தரிசனம் அனுமதிக்கப்படவில்லை. ஜோதி தெரியும் இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். ஜோதி தெரியும் இடங்களில் போலீஸ் பாதுாப்புடன், குடிநீர் போன்றவை வழங்க கூடுதல் ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. சன்னிதானத்தில் தற்போது பக்தர்கள் தங்குவதற்கு கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பகல் நேரங்களிலும் இனி பக்தர்கள் தங்கலாம். மகரவிளக்குக்காக நடை திறந்த மூன்று நாட்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். பெருவழிப்பாதையில் அதிகாலை 5:30 முதல் 10:30 வரை பக்தர்கள் அனமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 11.30 மணியாக மாற்றப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் இந்த பாதையில் ஆறாயிரம் பேர் வந்துள்ளனர்.