நடப்பு மண்டல சீசனில் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் பறக்காது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2022 11:01
சபரிமலை: நடப்பு மண்டல சீசனில் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் பறக்காது. டெண்டர் இறுதி செய்ய முடியாததால் மறு டெண்டர் கோர திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
கொச்சியில் இருந்து நிலக்கல்லுக்கு பக்தர்களை அழைத்து வர திருவிதாங்கூர் தேவசம்போர்டு டெண்டர் கோரியிருந்தது. சொந்தமாக ஹெலிகாப்டர்கள் வைத்திருக்கும் நிறுவனம் மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ளலாம் என்று நிபந்தனையில் கூறப்பட்டிருந்தது. இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டது. இதில் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமாக ஹெலிகாப்டர் இல்லை என்பது தெரிய வந்தது. மீதமுள்ள ஒரு நிறுவனத்தை வைத்து இறுதி முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நடப்பு சீசனில் ஹெலிகாப்டர் திட்டத்தை தேவசம்போர்டு கைவிட்டது. அடுத்த டெண்டரில் ஹெலிகாப்டர் சர்வீஸ் நடத்தும் நிறுவங்களும் கலந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் டெண்டர் கோரப்படும் என்று தேவசம்போர்டு உறுப்பினர் மனோஜ் கூறினார். பக்தர்கள் வசதிக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் சரங்குத்தியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க எடுக்கப்பட்ட முயற்சி பக்தர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டு அந்த திட்டம் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டிருந்தது.