தொண்டாமுத்துார் : ஆதியோகி முன் நடந்த நிகழ்ச்சியில், பொது மக்களுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ருத்ராட்ச தீட்சை வழங்கினார். நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசியதாவது: ருத்ராட்சம் தனித்துவமான அதிர்வுகளை கொண்டது. இந்த அதிர்வுகள் ஒரு மனிதர் தன் சக்தியை ஒருங்கமைத்து, அதை உறுதிப்படுத்த உதவுகிறது. இந்த சக்தி ஒரு பாதுகாப்பு கவசம் போல் செயல்படும். ஆதியோகி ருத்ராட்ச தீட்சையில், பஞ்சமுகி எனப்படும் ஐந்து முக ருத்ராட்சத்தை அளித்துள்ளோம். 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சண்முகி எனப்படும், 6 முக ருத்ராட்சத்தை பயன்படுத்திக்கொள்ளலாம், என்றார்.