சபரிமலையில் பிரசாத விநியோகத்துக்கு கூடுதல் கவுண்டர்கள் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2022 11:01
சபரிமலை: சபரிமலையில் பிரசாதம் விநியோகத்துக்கு கூடுதலாக மூன்று கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், மகரவிளக்கு காலத்தில் முன்பதிவு செய்தவர்களில் பெரும்பாலான பக்தர்களும் தரிசனத்துக்கு வருகின்றனர். இதனால் எல்லா நேரமும் நீண்ட கியூ காணப்படுகிறது. தரிசனம் முடிந்த பக்தர்கள் அப்பம், அரவணை பிரசாதம் வாங்க பக்தர்கள் நீண்ட கியூவில் நிற்கின்றனர். 18 படிகளின் வலது பக்கம் 12 பிரசாத கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மூன்று கவுண்டர்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. என்றாலும் கூட்டம் அதிகமாக உள்ளதால் அதனை சமாளிக்க கூடுதலாக மூன்று கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு பக்தரின் வேண்டுதால் நேற்று 18 ஆயிரத்து நெய் தேங்காய்களில் உள்ள நெய் அபிேஷகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த தேங்காய்கள் உடைக்கப்பட்டு பெரிய பாத்திரத்தில் நெய் சேகரிக்கப்பட்டது. சபரிமலையில் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுகிறது.