Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மகரம்: தை ராசி பலன் மகரம்: தை ராசி பலன் மீனம்: தை ராசி பலன் மீனம்: தை ராசி பலன்
முதல் பக்கம் » வைகாசி மாத பலன் (15.5.2022 முதல் 14.6.2022 வரை)
கும்பம்: தை ராசி பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
12:18

அவிட்டம் - 3, 4: எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த அவிட்ட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் சுபச்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாயை வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
சந்திராஷ்டமம் : ஜன. 22
அதிர்ஷ்ட நாள் : பிப். 9

சதயம்: பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப காலத்திற்காக காத்திருக்கும் சதய நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும்.
சந்திராஷ்டமம் : ஜன. 23
அதிர்ஷ்ட நாள் : பிப். 10

பூரட்டாதி - 1, 2, 3: அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் உடைய பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: திருவாசகம் படிப்பது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.
சந்திராஷ்டமம் : ஜன. 24
அதிர்ஷ்ட நாள் : பிப். 11

 
மேலும் வைகாசி மாத பலன் (15.5.2022 முதல் 14.6.2022 வரை) »
temple
அசுவினி: கொடுத்த வேலையை கச்சிதமாக முடிக்கும் உங்களுக்கு இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4: குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு இந்த மாதம் உடல் அசதி குறையும். ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: பழகுவதற்கு இனிமையானவரான உங்களுக்கு இந்த மாதம் காரியத் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் ... மேலும்
 
temple
மகம் : எடுத்த முடிவுகளில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் ராசிநாதன் சூர்யன் சஞ்சாரத்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.