பதிவு செய்த நாள்
17
ஜன
2022
04:01
சோமனூர்: சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழாவில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சோமனூர் சேடபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு 10 ஆண்டு நிறைவு விழாவும், திருக்கல்யாண உற்சவமும் நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. 8:30 மணிக்கு, அம்மனுக்கு பலவிதமான திரவியங்கள், புனித தீர்த்தங்களை கொண்டு அபிஷேக பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீ ராமலிங்கேஸ்வரருக்கும், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம் முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் மொய் எழுதி அம்மனின் அருள் பெற்றனர். தொடர்ந்து, ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மனுக்கு அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. பெண்கள் கும்மியடித்து ஆடிப்பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.