மதுரை: நாடு நலம் பெறவும், மக்கள் நோயற்ற வாழ்வு வாழவும், ஒற்றுமை பெருகவும் திருப்பரங்குன்றம் உப நகர் தர்ம ஜாக்ரன் சார்பில் தை வெள்ளியை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது. மதுரை கைத்தறி நகரில் அருள்மிகு உண்ணாமுலை சமேத அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடந்த இந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சுவாமி சுப்ரமணியானந்தா தலைமையில் இந்த பூஜை சிறப்பாக நடந்தது.