சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2022 10:02
சபரிமலை : சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று துவங்கியது.
மாசி மாத பூஜைகளுக்காக, பிப்., 12 மாலை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 13 முதல் 17 வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான முன்பதிவு, www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று தொடங்கியது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நேற்று மாலையே, பிப்., 13க்கான நான்கு சிலாட் முன்பதிவு முடிந்து விட்டது.முன்பதிவு செய்த கூப்பனுடன், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.