செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நேற்று நடந்த ரதசப்தமி விழாவில் ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது.
செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் உள்ள புகழ்பெற்ற ரங்கநாதர் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. இதை முன்னிட்டு ரங்கநாதருக்கு அதிகாலை 5 மணிக்கு திருமஞ்சனம் செய்தனர். காலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் சூரிய பிரபை வாகனத்திலும், 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், 10 மணிக்கு பெரிய திருவடி என்றும் கருட சேவை வாகனத்திலும், 12 மணிக்கு குதிரை வாகனத்திலும் மாட வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. பகல் ஒரு மணிக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து மீண்டும் 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும்,4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் மாட வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது. இதில் உபயதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது.