மிருகசீரிடம் 3,4 பாதம் மனதில் உற்சாகம் மேலிடும். நற்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். பொது பிரச்னைகளில் தலையிட்டு தீர்வு காண முயல்வீர்கள். உடல்பயிற்சியில் ஈடுபட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்ப்பு சிலருக்கு நிறைவேறலாம். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். அனுபவசாலிகளின் ஆலோசனைகளை ஏற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் காட்டி வந்த கடுமையான போக்கு மாற்றிக் கொள்வர். நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்களின் பேச்சு, செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறுவார்கள். பங்குதாரர்களின் ஆதரவைக் கண்டு மனநிறைவு கொள்வர். கலைத்துறையினர் ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் பெறுவார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் எதிர்கால வளர்ச்சி கருதி உற்சாகத்துடன் பணியாற்றுவர். மாணவர்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவர். பெற்றோர், ஆசிரியர்களின் தேவையறிந்து நிறைவேற்றுவர். சந்திராஷ்டமம்: பிப். 27 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 8 பரிகாரம் அஷ்டமியன்று பைரவர் கோயிலுக்குச் செல்லுங்கள்.
திருவாதிரை: எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். நீண்ட நாள் நோய்கள் விலகும். ஆரோக்கியம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். வெளியூர் பயணம் மூலம் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம், பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். நிர்வாகம் தொடர்பான செலவுகள் கூடும். தொழிலாளர்கள் நலன் குறித்து அக்கறை கொள்வீர்கள். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபட்டு மகிழ்வர். சக பணியாளர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தினரால் கூடுதல் பொறுப்பை ஏற்க நேரிடும். நீண்ட கால நோய் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னை தீரும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். மனம்போல ஆடை ஆபரணம் வாங்குவர். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். அரசியல் துறையினர் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்கள் தேர்வு நோக்கில் படிப்பர். சந்திராஷ்டமம்: பிப். 28 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 9, 10 பரிகாரம் : வியாழனன்று குருபகவானுக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.
புனர்பூசம் - 1, 2, 3 பாதம்: சாமர்த்தியமாக பேசி எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட துாரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். சுபவிஷயத்தில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வீண் அலைச்சல்களால் சிலர் அசதிக்கு ஆளாகலாம். கூர்மையான மதி நுட்பத்தால் பிரச்னைகளை எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வில்லங்கம் முடிவுக்கு வரும். பள்ளிக்கால நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்வீர்கள். அண்டை வீட்டார் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனைகளை பின்பற்றி வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டாலும் பணியை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெண்களின் ஆலோசனை கேட்டு குடும்பத்தினர் செயல்படுவார்கள். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பெண்கள் பாடுபடுவர். அரசியல் துறையினர் முன்யோசனையுடன் செயல்படுவது நன்மையளிக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். சந்திராஷ்டமம்: மார்ச் 1 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 10, 11 பரிகாரம்: அனுமனுக்கு துளசிமாலை சாற்றி வழிபட நன்மை சேரும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »