புனர்பூசம் 4ம் பாதம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ளவர்களுடன் சேர வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது நல்லது. பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை நடக்கும். பூர்வீக சொத்து மூலம் வருமானம் கிடைக்கும் வாய்ப்புண்டு. ஆன்மிக சிந்தனையுடன் செயல்பட்டு வருவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உடல்நலம், மனநலத்துடன் செயல்படுவீர்கள். பணியாளர்கள் இடம் மாற்றம் அல்லது அதிகாரிகளின் நெருக்கடிகளால் அனுபவ பாடங்களை பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள். ஆனால் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணவரவுகள் சீராக இருக்கும். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். புகுந்த வீட்டினரின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். கலைத்துறையினர் இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்வர். தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்வர். அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவுடன் அரசிடம் இருந்து சலுகை காண்பர். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி புகழ் பெறுவர். சந்திராஷ்டமம்: மார்ச் 1 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 10, 11
பரிகாரம் : ராமர் கோயிலை வலம் வரவும்.
பூசம்: அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணம் வரவு நன்றாக இருக்கும். வங்கியில் கையிருப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிக்க முயல்வீர்கள். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக் கூடும். உங்களை விமர்சனம் செய்தவர்கள் சொந்த பணிகளால் அதனை விட்டு விடுவார்கள். பிள்ளைகளின் வகையில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் விலகும். சிலர் வங்கிநிதியுதவியுடன் விரிவாக்கப் பணிகளில் ஈடுபடுவர். பணியாளர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பெண்கள் நிதானமாக பேசினால் வாக்குவாதம் உண்டாகாது. கலைத்துறையினர் நவீன மாற்றங்களை செயல்படுத்துவர். தொழில்ரீதியாக சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். நட்பு வட்டாரத்தில் செல்வாக்கு உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வத்துடன் முன்னேறுவர். சந்திராஷ்டமம்: மார்ச் 2 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 11, 12
பரிகாரம்: சனிக் கிழமையன்று விஷ்ணு சகஸ்ர நாமம் படியுங்கள்.
ஆயில்யம்: துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல் தீரும். சேமிக்கும் விதத்தில் பணவரவு கூடும். அரசாங்கம் மூலம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். நீண்ட துார பயணங்களால் ஆதாயம் காண்பீர்கள். தொலை துார செய்திகள் மனதிற்கு இனிமை சேர்க்கும். சுப விஷயங்களில் இருந்து வந்த தடை அனைத்தும் விலகும். உறவினர்களுடன் இணக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். கடன் பாக்கிகள் வசூலாகும். கடந்த கால உழைப்பிற்கான பலன் இப்போது கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு குடும்பத்தினரின் மத்தியில் மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு கடிதம் மூலம் நல்ல தகவல்கள் வரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் விடாப்பிடியாக செயல்பட்டு மக்கள் பணிகளை நிறைவேற்றுவர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பயனுள்ள பொழுது போக்குகளில் ஈடுபடுவர். சந்திராஷ்டமம்: மார்ச் 3 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 12, 13
பரிகாரம் : விநாயகர் வழிபாட்டால் துன்பம் தீரும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »