மகம்: நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பொதுப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நலனில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் அதிகரிக்கலாம். மாமன், மைத்துனர் வகையில் சுபச்செலவு செய்ய நேரிடும். ஆயுதங்கள் கையாளும் போதும், வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம். உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க விடாமுயற்சி தேவைப்படும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். ஆனால் சக ஊழியர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் உதவி தேவையான சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தினருடன் பேசும் போது வார்த்தைகளை அளந்து பேசுவது முக்கியம். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் தேடி வரும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வளர்ச்சி அமையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களால் உதவி உண்டு. சந்திராஷ்டமம்: மார்ச் 4 அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 15 மார்ச் 13, 14
பரிகாரம் : துர்கையை வணங்க நன்மை உண்டாகும்.
பூரம்: இந்த மாதம் ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் சிலர் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து பிறர் உங்களிடம் சண்டை போடலாம் கவனம். கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ண நேரிடும். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டி இருக்கும். எதிர்பார்த்ததை விட லாபம் சற்று குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமையால் சோர்வடைய நேரலாம். சக ஊழியர்களின் உதவி சரியான சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை துாக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். அக்கம்பக்கத்தினரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். தானுண்டு தன் வேலையுண்டு என படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நண்பர்களால் உதவி உண்டு. சந்திராஷ்டமம்: மார்ச் 5 அதிர்ஷ்ட நாள்: பிப்.15, 16 மார்ச் 14
பரிகாரம்: லட்சுமியை வழிபட கடன் பிரச்னை தீரும். செல்வநிலை உயரும்.
உத்திரம் 1ம் பாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்துடன் திகழும். உழைப்புக்கேற்ப வருமானம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிலர் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். நண்பர், உறவினர் வகையில் திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பணவரவு அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பங்குதாரர்களின் ஆதரவு மனதிற்கு நிறைவைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அரசியல் துறையினருக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: மார்ச் 6 அதிர்ஷ்ட நாள்: பிப். 16, 17
பரிகாரம் சரபேஸ்வரரை வணங்கி வர நன்மை உண்டாகும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »