விசாகம் 4ம் பாதம்: உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவிகள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேத வாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அரசுத்துறை, தனியார் துறை பணியாளர்கள் பணியின் பொருட்டு வெளியூர்களுக்கு சென்று வர நேரிடும். தொழிலதிபர்கள் தொழில்விஷயமாக நீண்ட பயணம் மேற்கொள்வர். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு மிக்க மனிதராக திகழ்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் பன்மடங்கு கிடைக்கும். சிலர் பங்குதாரர்களின் மூலம் மூலதனத்தை அதிகப்படுத்துவர். பெண்கள் சேமிப்பு பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். பிள்ளைகளின் நலனுக்காக தியாகம் செய்யவும் முன்வருவர். கலைத் துறையினர் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் உயரும். மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள். அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர். தொண்டர்களின் ஆதரவைப் பெற பணம் செலவழிக்க நேரிடலாம். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். கல்விச் செலவுக்கு தேவையான பணம் எளிதாகக் கிடைக்கும். படித்து முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்புகள் பெறுவார்கள். சந்திராஷ்டமம்: மார்ச்10, 11 அதிர்ஷ்ட நாள்: பிப். 20, 21 பரிகாரம்: சிவன் கோயிலுக்கு அடிக்கடி செல்லுங்கள்.
அனுஷம்: காரியங்களில் குறுக்கிட்ட தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நீங்கள் திட்டமிட்டபடி மனை, வீடு வாங்க வாய்ப்பு உண்டு. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான சுபநிகழ்ச்சிகள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. அயல்நாட்டு ஒப்பந்தம் மூலம் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். குடும்பத்தில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு தடைகள் விலகும். கலைத்துறையினருக்கு தைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சந்தோஷமான சூழல் அமையப் பெறுவர். அரசியல் ரீதியான பயணம் வெற்றிகரமாக முடியும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சந்திராஷ்டமம்: மார்ச் 11, 12 அதிர்ஷ்ட நாள்: பிப். 21, 22 பரிகாரம் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
கேட்டை: தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டாகும். படிப்பு, வேலை வாய்ப்புகளில் பிள்ளைகள் முன்னணி வகிப்பர். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் கடந்த கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடித்து காட்டுவீர்கள். சக தொழிலதிபர்கள் மத்தியில் அந்தஸ்து அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு இழுபறியாக இருந்த விஷயங்கள் சாதகமாக முடியும். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். கலைத்துறையினருக்கு விருப்பம் கைகூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலகட்டம் இது. மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் தடைகள் விலகி முன்னேற்றம் காண்பர். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். விளையாட்டு துறையில் சிலர் ஆர்வம் காட்டுவர். சந்திராஷ்டமம்: மார்ச் 12, 13 அதிர்ஷ்ட நாள்: பிப். 22, 23 பரிகாரம் : முருகனை வணங்க முன்னேற்றம் காண்பீர்கள்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »