மூலம்: எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமான முடிவுடன் பணியாற்றுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து மிக்க மனிதராகத் திகழ்வீர்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். லாபம் படிப்படியாக உயரும். பழைய கடன்கள் அடைபடும். சிலர் சேமிப்பிலும் ஈடுபடுவர். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கலாம். செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். பெண்கள் வீண் பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்குவது நன்மை தரும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு சிலநேரங்களில் கோபம் வரலாம். கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி நல்ல சூழ்நிலை அமையும். சக கலைஞர்களின் உதவியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் மேலிடத்தில் இருப்பவர்களின் அலட்சிய பேச்சைக் கேட்டு மனம் நோவர். தொண்டர்கள் செயல்பாடு ஆறுதல் தரும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய நண்பர்களிடம் கவனமாக பழகுவும். பெற்றோரின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள். சந்திராஷ்டமம்: பிப்.14, 15 மார்ச் 13, 14 அதிர்ஷ்ட நாள்: பிப். 23 பரிகாரம் சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் போக்கும்.
பூராடம்: திறமைகளை சரியான இடத்தில் வெளிப்படுத்துவீர்கள். சாதுர்யமாக செயல்பட்டு எதையும் சாதித்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய மனிதர்களிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. எதிர்பாராமல் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தில் அடிக்கடி விருந்தினர்கள் வருகை இருக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக அலைய நேரிடும். கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பர். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் முழுமூச்சாக ஈடுபடுவர். புதிய நண்பர்கள் உதவுவர். சந்திராஷ்டமம்: பிப்.15,16 மார்ச் 14 அதிர்ஷ்ட நாள்: பிப்.24 பரிகாரம் : ராமரை வணங்கினால் அனுகூலம் உண்டாகும்.
உத்திராடம் 1ம் பாதம் மற்றவர்களின் உணர்வுகளையும் மதித்து நடப்பீர்கள். இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரணமின்றி கோபத்திற்கு ஆளாவீர்கள். ஏதாது ஒரு வகையில் அடுத்தவரிடம் வாக்குவாதம் ஏற்படலாம். மற்றவர்கள் செயல்பாடுகளால் வருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்த பிரச்னை முடிவுக்கு வரும். சுப விஷயங்களில் ஏற்பட்ட தடை, தாமதம் முடிவில் நன்மை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பின்தங்கிய நிலை மாறும். ஆதாயம் சீராக இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் செல்ல நேரிடலாம். கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும், சகோதரர்கள் வழியில் பிரச்னை தலைதுாக்கலாம். கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமை நிலவும். பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. விருப்பம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். கலைத்துறையினருக்கு இயல்பான நிலை காணப்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு படிப்பில் முன்னேற்றம் காண்பர். சந்திராஷ்டமம்: பிப்.16, 17 அதிர்ஷ்ட நாள்: பிப்.25 பரிகாரம் : ஆதியந்தபிரபு வழிபாடு நன்மை அளிக்கும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »