சித்திரை 3, 4 பாதம் ஆன்மிக எண்ணங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். திருத்தல யாத்திரை செல்ல வாய்ப்பு உண்டு. மகான்கள், பெரியவர்களின் ஆசி கிடைக்கும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனமுடன் இருந்தால் வெற்றி பெறலாம். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுபவிஷயத்தில் தாமதம் ஏற்பட்டாலும் அது நன்மையாக முடியும். உத்தியோகஸ்தர்கள் அனுபவசாலிகளின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணிகளில் சிறந்து விளங்குவார்கள். பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை நடந்தேறும். தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைத்து தொழில் சிறக்க வழி காட்டுவார்கள். தொழிலாளர் நலனில் கவனம் செலுத்துவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகைகள் எளிதாகக் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் சிலருக்கு சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர் கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகலாம். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய பணிகள் நிறையவே காத்திருக்கிறது. மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சந்திராஷ்டமம்: மார்ச் 8 அதிர்ஷ்ட நாள்: பிப்.18, 19 பரிகாரம் காளியம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.
சுவாதி: முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரவு அதிகமாக இருக்கும். எதிர்காலம் கருதி சேமிப்பில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அவர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். அயல்நாட்டு ஒப்பந்தம் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. கொடுத்த வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த பிரச்னைகள் குறையும். பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்கும் போது பலமுறை யோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு திடீர் பொறுப்புகள் அதிகரிக்கும். தொண்டர்கள் வகையில் பணம் செலவாகும். கலைத்துறையினர் இழுபறியைச் சந்தித்தாலும் ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். சந்திராஷ்டமம்: மார்ச் 9, 10 அதிர்ஷ்ட நாள்: பிப். 19, 20 பரிகாரம் : கண்ணனை வழிபட்டால் நிம்மதி உண்டாகும்.
விசாகம் - 1, 2, 3 பாதம் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி உண்டாகும். புத்தி சாதுாரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். சுபவிஷயங்களில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடந்த கால அனுபவ பாடங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். பணவரவு சற்று தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அடிக்கடி பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர, சகோதரி வகையில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். தொழில், வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் பிரச்னை தலை துாக்கலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்கள், நண்பர்களிடம் விட்டுக் கொடுப்பது நல்லது. பெண்கள் அனுபவசாலிகளின் துணை கொண்டு எதையும் சாதிப்பார்கள். கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் பணி சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவது நல்லது. மக்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும். தேர்வு நோக்கில் அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர். சந்திராஷ்டமம்: மார்ச் 10, 11 அதிர்ஷ்ட நாள்: பிப். 20, 21
பரிகாரம் : சரஸ்வதியை வணங்க நன்மை கூடும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »