மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் சுவாமி அகோர மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தளத்தில் நவக்கிரகங்களில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். காசிக்கு இணையான தளங்களில் முதன்மையான இங்கு பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதுடன், மெய்கண்டார் அவதரித்ததும் ஆகும் இத்தலத்தில் சுவாமி எமனை சம்ஹாரம் செய்வதாக ஐதீகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் இந்திரப் பெருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. கோவிலில் பாபு குருக்கள் தலைமையிலானோர் பூஜைகள் நடத்திய பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது தொடர்ந்து தேரோட்டத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு துர்கா ஸ்டாலின் அன்னதானம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன் சீர்காழி பன்னீர்செல்வம் மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் தேரோட்டத்திற்கு ஏற்பாடுகளை திருவெண்காடு கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.