பதிவு செய்த நாள்
25
பிப்
2022
02:02
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அபிநயா நாட்டியப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரதநாட்டிய சலங்கை பூஜையில் சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று அருளாசி கூறினார்.
வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், பாண்டுரெங்கன், செந்தில்வேல், ஜெயக்குமார், செந்தில்குமார், மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் சத்யபாமா, செல்வகுமார், முத்துக்கணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், மாணவர்கள் ஹர்ஷித், வைஷ்ணவி ஆகியோரின் சலங்கை பூஜையையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சலங்கை பூஜையில் நாட்டியமாடிய மாணவர்கள் மற்றும் 38 விநாடிகளில் பரதநாட்டியத்தின் 73 முத்திரைகளையும் வாய்மொழியினாலும், கண் அசைவினாலும் கை முத்திரைகளை பதித்து கலாம் உலக சாதனை படைத்த மாணவி ரக்ஷிதா மற்றும் திருச்சியில் தமிழ் பண்பாட்டுக் கழகம் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட விழாவில் பரத நாட்டியத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற நாட்டியப் பள்ளி குரு உமாமகேஸ்வரி ஆகியோருக்கு, சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி அருளாசி கூறினார். முடிவில், நாட்டியப் பள்ளியின் நிறுவனர் கல்யாண் நன்றி தெரிவித்தார்.