பதிவு செய்த நாள்
28
பிப்
2022
11:02
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நாளை (மார்.,1) கோலாகலமாக நடைபெறுகிறது.
மதுரை, மேலமாசி வீதியில் இம்மையிலும் நன்மைதருவார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் மாசி மாதம் தேய்பிறை திரயோதசி மற்றும் சதுர்தசி சந்திக்கும் நாள் இரவு மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு, 10.00 மணிக்கு, முதல் கால பூஜை, இரவு, 12.00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மறுநாள் அதிகாலை, 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை, அதிகாலை 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில், நாளை இரவு பன்னிருதிருமுறை இசைக்கச்சேரி, நாதஸ்வர நிகழ்ச்சி, சொற்பொழிவு என, பல்வேறு நிகழ்வு நடக்கிறது. வகங்கை சமஸ்தானம், மதுராந்தகிநாச்சியார் அவர்களின் நிர்வாக்த்திற்குட்பட்ட இக்கோயிலில், விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.