பதிவு செய்த நாள்
08
மார்
2022
11:03
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே பழனிமாநகரில் மகா மாரியம்மன், காமாட்சி அம்மன், விநாயகர், கருப்பசாமி உள்ளிட்ட கோயில்களுக்கு அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடந்தது.
சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் ஊராட்சி பழனிமாநகரில் உள்ள விநாயகர் கோவில், மகா மாரியம்மன், காவல்காரன், கருப்புசாமி, வேட்டைகருப்பு, காமாட்சி அம்மன், கன்னிமார் உள்ளிட்ட கோயில்களுக்கு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக மார்ச் 6-ஆம் தேதி கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து வழிபட்டனர். பின் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கனி மூலிகை வேள்வி, மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு மகா சங்கல்யம், புண்ணியாகவாஜனம், பிம்பி சக்தி, நாடி சந்தனம்,காமாட்சி அம்மன், மகா மாரியம்மனுக்கு உயிர் ஊட்டுதல், கோ பூஜை, கண்ணியா பூஜை, சுமங்கலி பூஜை, கனி மூலிகை வேள்வி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பின் 9.30 மணிக்கு காமாட்சி அம்மன், மகா மாரியம்மன் கோவில்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட தெய்வங்களுக்கும் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டம் அடித்தார். இந்த கும்பாபிஷேகத்தை பிரசன்ன வெங்கடேச ஐயர் ஆகம முறைப்படி நடத்தி வைத்தார்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள், வா.உ.சி. இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.