* சிரித்த முகத்துடன் இரு. அதுவே உன் வாழ்க்கையை அழகாகக்கும். * ஆசைகளை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீர்படுத்து. ஆனந்த வாழ்வு உன் வசமாகும். * நல்ல மனம், சத்தான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இருந்தால் உடல்நலத்துடன் வாழலாம். * பிறர் மீது கோபம் கொள்ளும் போது, அந்தக் குறை உன்னிடம் உள்ளதா என்று கவனி. * எங்கு தேடினாலும் அமைதி கிடைக்காது. ஏனென்றால் அது உன் மனதில்தான் உள்ளது. * எதிலும் அளவறிந்து வாழப் பழகு. பிரச்னையே ஏற்படாது. * எந்தச் சூழ்நிலையிலும் உனக்கு கோபம் வராவிட்டால், நீ ஞானம் அடைந்துவிட்டாய். * இயற்கைக்கு எப்போதும் மதிப்பு கொடு. நீதி, நியாயத்தை பின்பற்று. * கேள்விப்படுகிற எல்லா விஷயத்தையும் நம்பி விடாதே. * லட்சியத்தில் உறுதி இருந்தால் நீ எண்ணியதெல்லாம் நடக்கும். * எல்லோரிடமும் எல்லா விஷயத்தையும் சொல்லாதே. * நீ சொன்னதுதான் சரி என பிறரிடம் வாதம் செய்யாதே. * சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்துகொள்.