Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023 .. ... விருச்சிகம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 – 2023.. அதிர்ஷ்ட காலம் விருச்சிகம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
துலாம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023.. ஏற்றம் தரும் காலம்
எழுத்தின் அளவு:
துலாம் : குருப்பெயர்ச்சி பலன் 2022 - 2023.. ஏற்றம் தரும் காலம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2022
02:04

சித்திரை 3, 4ம் பாதம்: ஏற்றம் தரும் காலம்

செயலாற்றல் தரும் செவ்வாயை நட்சத்திர அதிபதியாகவும், அதிர்ஷ்டம் தரும் சுக்கிரனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களிடம் மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் நிறைந்திருக்கும். உங்களுடைய செயல்களில் அதிக ஈடுபாடு காட்டக்கூடியவரான உங்களுக்கு ஒன்றரை ஆண்டுக்குமேல் வனவாச நிலை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உண்டான குருப்பெயர்ச்சி சங்கடங்களில் இருந்து உங்களை மீள வைத்தது என்றே சொல்லலாம். இந்த நிலையில் 2022 ஏப்.13ல் குரு உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான மீனத்தில் சஞ்சரிக்க உள்ளார். ஆறில் சஞ்சரிக்கும் குரு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை வழங்குவாரா என்ற கேள்விக்கு, குரு அமரும் இடத்தை விட அவர் பார்க்கும் இடங்களுக்கே அபரிமிதமான பலன்களை வழங்குவார் என்பதை மனதில் கொள்வோம். அந்த ரீதியில் உங்களின் தொழில் ஸ்தானம், அயன சயன, போக ஸ்தானம், தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தையும் தனது 5, 7, 9ம் பார்வைகளால் நன்மை தருவார்.  இதே நேரத்தில் ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவும், 7 ல் சஞ்சரிக்கும் ராகுவும்,  சுக ஸ்தானமான 4 ல் சஞ்சரிக்கும் சனியும் உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்குவர். இந்த இரு வேறு நிலைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

நிதி: தொழில் வகையில் இருந்த மந்தநிலை விலகி இனி வருமானம் அதிகரிக்கும். சொத்துகள் வாங்குவதும், வீடு கட்டுவதும், ஆடம்பர செலவுகள் செய்வமாக இருப்பீர்கள். வங்கியில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலர் வீட்டில் இருப்பதை விற்று  நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.  கையிருப்பு கரையலாம். போட்டிகளின் காரணமாக புதியவற்றில் முதலீடு செய்யும் எண்ணம் உண்டாகும். நல்ல நண்பர்களின் ஆலோசனைகள்  கை கொடுக்கும். சிலர் புதியதாக கடன்பெற்று அதன் வழியே வருமானத்தை அதிகரிக்கும் வழியை உண்டாக்குவர்.

குடும்பம்: அர்த்தாஷ்டமச் சனி உண்டாக்கும் பாதிப்பால் தொடர்ந்து பிரச்னைகளையே சந்தித்து வரும் நிலையில் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது எதிர்பார்த்திராத மாற்றத்தை உண்டாக்குவார். நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலும் உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். குடும்பத்திற்குள் ஏதாவது பிரச்னைகள் உருவாகிக்கொண்டே இருக்கும். இதுவரையில் கணவன், மனைவிக்குள் இருந்த ஒற்றுமையில் விரிசல் உண்டாகும். உறவுகளும் பகையாவார்கள். இந்த நேரத்தில் 7 ல் உள்ள ராகு  தவறான வழிகளுக்கு அழைத்துச்செல்ல வாய்ப்புண்டு. புதிய நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தின் நலனுக்காக செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிலர் குடும்பத்தை விட்டு இக்காலத்தில் வெளியேறவும் நேரிடும். குருவின் பார்வைகளால் உண்டாகும் பலன்கள் உங்களைப் பாதுகாக்கும்.

கல்வி: கல்வி பற்றிய சிந்தனையில் குழப்ப நிலையே இருக்கும். நன்றாக படித்தும் மனதில் நிறுத்த முடியாமல் அவதிப்படுவீர்கள். என்றாலும் உங்களுக்கு பாக்கியாதிபதி வித்யாகாரகன்தான் என்பதால்  நினைத்த இலக்கை அடைவீர்கள். கவனம் செலுத்தினால் மதிப்பெண்கள் கூடும். பொறியியல், டெக்னிக்கல், கலை, அறிவியல், காமர்ஸ், ஏரோநாட்டிக்கல் மாணவர்கள் சிறப்படைவர். உங்கள் முயற்சி ஒன்றே இக்காலத்தில் உங்களை வெற்றியாளராக்கும்.

பெண்கள்:  சமீப காலமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எதிர்மறையாக மாறி வருகிறது என்றாலும் இக்காலத்தில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு  முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் ஒவ்வொன்றாக சுப நிகழ்வுகள் நடந்தேறும். அதற்காக கடன் பெறும் சூழல் உருவாகும். ஏழில் உள்ள ராகு தவறான வழியைக் காட்ட வாய்ப்புண்டு என்பதால் புதிய உறவுகளை இக்காலத்தில் தவிர்த்திடுங்கள். எல்லாம் நன்மையாகவே சென்று கொண்டிருந்தாலும் மனதிற்குள் ஒரு இனம் புரியாத குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.

உடல்நிலை:  சனி அர்த்தாஷ்டமத்தில் சஞ்சரித்து உங்கள் நிலையற்றத் தன்மையை உருவாக்கும். ரோக ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்க ஒன்று போனால் ஒன்று என்ற நிலையில் நோயால் சங்கடப்படுவீர்கள். சிறு விபத்துகளையும் சந்திப்பீர்கள். மருத்துவச் செலவு அதிகரித்தாலும் கண்டங்கள் உண்டாகாது. பயணத்திலும், வாகனத்தை இயக்கும் போதும் கூடுதல் கவனம் தேவை. வீண் எண்ணங்களும். அதன்வழியே கவலைகளும் உங்களை ஆட்கொள்ளும் என்பதால் மனதை அமைதி வழிக்கு கொண்டு செல்லுங்கள்.

தொழில்: கிரகங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியைச் செய்து  வாழ்க்கை என்றால் என்னவென்று நமக்கு உணர்த்தி வருகின்றனர். சனி, ராகு, கேது உங்களுக்கு சங்கடமான பலன்களை வழங்கினாலும் தொழில் ஸ்தானத்தின் மீதான குருவின் பார்வையால் லாபம் அடைவீர்கள்.  சிலர் புதிய தொழில் தொடங்குவர். வேலைக்காக முயற்சி செய்பவர்கள் பணயில் அமர்வீர்கள். கூட்டுத்தொழில்கள் இக்காலத்தில் வேண்டாம். தொழிலுக்காக இடம், சொத்து என்று வாங்கும்போது அதில் சட்ட சிக்கல்கள் உள்ளதா என்பதை நன்றாக கவனிக்க வேண்டும். இல்லையெனில் பொருளிழப்பு உண்டாகலாம்.

பரிகாரம்: ஐயாவாடியில் இருந்து அருள்புரியும் பிரத்யங்கிரா தேவியை மனதில் நினைத்து செயல்பட சங்கடங்கள் விலகும்.

சுவாதி: குடும்பத்தில் மகிழ்ச்சி

அதிர்ஷ்டத்திற்கு காரகனான சுக்கிரனை ராசி நாதனாகவும், யோகத்திற்கு காரகனான ராகுவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களிடம் எதையும் சாதாரணமாக ஏற்கும் குணமிருக்கும். வாழ்வில் சுகத்திற்கு எப்போதும் முதலிடம் கொடுப்பீர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீங்கள் நினைத்தபடி செயல்பட முடியாத அளவிற்கு உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகி  இருக்கும் என்றாலும் கடந்த ஆண்டு நவம்பர் முதல் குரு உங்கள் நிலையில் மகிழ்வான நிலையை உருவாக்கி இருப்பார். 2022 ஏப்.13 முதல் குரு உங்கள் ராசிக்கு 6 ஆம் இடமான மறைவு ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் குரு வழங்கி வந்த நற்பலன்களில் இனி மாறுதல் உண்டாகப் போகிறது. ஆனால், அவருடைய பார்வைகளுக்கு உள்ளாகும் இடங்களின் வழியே நன்மைகளை அடைவீர்கள். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு இக்காலத்தில் அதற்குரிய பலன் உண்டாகும். பணம் பல வழிகளிலும் செலவாகும். தேவையற்ற செலவுகள் செய்து வருந்துவீர்கள். படுக்கை சுகம் உங்களின் மற்ற செயல்களுக்கு தடைகளை உண்டாக்கும். உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றும் அளவிற்கு நிதிநிலை சீராக இருக்கும். ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது உங்கள் மனதை வீண் குழப்பத்திற்கு ஆளாக்கலாம். 7 ல் சஞ்சரிக்கும் ராகு தவறான நட்புகளால் உங்களை திசை திருப்பலாம். உங்கள் தகுதிக்கு குறைவானவர்களிடம் ஆசை அல்லது காதல் தோன்ற வைத்து சங்கடமான நிலைக்கு ஆளாக்கலாம். அர்த்தாஷ்டமச் சனியும் ஒரு பக்கம் உங்களை நெருக்கலாம். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். இருந்தாலும் உங்கள்  ஜாதக அமைப்பு மற்றும் திசாபுத்திகளின் வழியே சங்கடங்கள் குறையும். குருவின் பார்வைகளும் இக்காலத்தில் நன்மை வழங்கும்.

நிதி: தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அகலும். புதிய முயற்சிகள் கை கொடுக்கும் என்றாலும்  விரிவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
 ஆன்லைன் வர்த்தகத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். ரோக ஸ்தானத்தில் உள்ள குரு அதிகபட்ச உழைப்பால் சோர்வடைய வைப்பார். தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் சுய சம்பாத்தியம் உண்டாகும். பொன், பொருள் வாங்கி மகிழும் நிலை உண்டாகும். குறுக்கு வழியில் சென்று சம்பாதிப்பதற்கு சிலர் வழிகாட்டலாம். சட்டத்திற்கு புறம்பான வருமானம் பற்றிய சிந்தனையால் சட்ட பிரச்னைக்கு ஆளாகலாம். புதிய வாகனம். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். அடுத்தவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது, அவர்களுடைய கடன்களை அடைக்க பணத்தைக் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். பாப கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு பாதகத்தை உண்டாக்கிட காத்து க்கொண்டிருப்பதால் எந்தவொரு செயலாக இருந்தாலும் நிதானித்தும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்தும் செயல்படுவது நல்லது.

குடும்பம்: உங்களைச்சுற்றி நெருக்கடிகள் இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி என்ற நிலை உண்டாகும். குடும்ப நலனில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையானவற்றை ஒவ்வொன்றாக வாங்கி சேர்ப்பீர்கள். 7 ல் உள்ள ராகுவால்  சங்கடங்களை சந்திப்பீர்கள். ஒரு சிலர் அவமானப்படவும் நேரும்.  குடும்பத் தேவைகள் நிறைவேறும் என்பதால் வீண் குழப்பங்களைத் தவிர்த்து விடுங்கள். இருப்பதையும், நியாயமாக வருவதையும் வைத்து இக்காலத்தில் வாழுங்கள். வீண் சங்கடம் உண்டாகாது.

கல்வி: தட்டுத்தடுமாறி முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் இடையில் உண்டான தடைகளால் உங்கள் மனம் வீண்விஷயங்களில் ஈடுபட்டு சிந்தனை மாற்றம் பெற்றிருப்பீர்கள். கல்வியும் அதனால் கிடைக்கும் வேலையும்தான் வாழ்வை இனிதாக்கும் என்பதை உணரும் தருணம் இது. கல்வியின் மீதான ஆர்வம் ஏற்பட்டு படிக்க ஆரம்பிப்பீர்கள். பொறியியல், மருத்துவம் சார்ந்த மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அரசுத் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் முழுகவனம், சிந்தனையை படிப்பில் செலுத்த வேண்டியதாக இருக்கும். பள்ளி மாணவர்கள் தேர்வு முடியும்வரை பொழுதுபோக்கு பற்றிய எண்ணத்தைக் கைவிட்டு படித்தால் மட்டுமே வெற்றி இலக்கை அடைய முடியும்.

பெண்கள்: குடும்பத்தின் மீதிருந்த கவலைகள் விலகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்பத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். களத்திர ஸ்தானத்தில் உள்ள ராகுவால் கணவருக்கு சில சங்கடங்கள் உருவாகலாம். கணவருடன் ஒரு சிலருக்கு வருத்தம் ஏற்படலாம். வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலையில் அதிருப்தி நிலவும். . பிள்ளைகளின் வழியே வீண்செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளால் நெருக்கடி நிலைக்கு ஆளாவீர்கள்.

உடல்நிலை: அர்த்தாஷ்டமச்சனி  சங்கடங்களை உண்டாக்குவார். பயணத்தில் கவனம் தேவைப்படும். சிலர் விபத்துகளையும் சந்திக்க நேரிடலாம். 7 ல் உள்ள ராகுவும் விஷ நோய்களை உருவாக்குவார். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் கேது மனதில் இனம்புரியாத குழப்பம், பயத்தை உருவாக்குவார். வயிற்றுப் பிரச்னை, ரத்த அழுத்தம்,  பரம்பரை நோய்களால் பாதிக்கப்படலாம். ரகசிய நோய்களும் சிலரை தாக்கும் என்பதால் இக்காலத்தில் நீங்கள் ஒழுக்கமுடன் இருப்பது அவசியம்.

தொழில்: நன்மைகளும் தீமைகளும் நிறைந்ததே வாழ்க்கை என்பதை இக்காலத்தில் நீங்கள் உணர்வீர்கள். பல்வேறு நெருக்கடி இருந்தாலும் நீங்கள் செய்யும் தொழிலில் சீரான முன்னேற்றம் காண்பீர்கள். கூட்டுத்தொழில்களில் மட்டும் இக்காலத்தில் நன்மைகள் உண்டாகாது. ஒவ்வொன்றிலும் உங்களுடைய நேரடி கண்காணிப்பும் முயற்சியும் அவசியமாகும். மருத்துவம், ரசாயனம், கமிஷன் ஏஜன்சி, ஏற்றமதி, இறக்குமதி, மருந்து நிறுவனம், ஓட்டல் தொழில் புரிவோர் நன்மைகள் காண்பர். உங்களுக்குத் தெரியாத அனுபவமில்லாத தொழில்களில் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம்.  அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு இது யோக காலமாகும்.

பரிகாரம் வராகியை மனதில் எண்ணி உங்கள் செயல்களில் ஈடுபடுங்கள் தடைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்: குருவருளால் நன்மை

தனம், புத்திர காரகனான குருவை நட்சத்திர அதிபதியாகவும், கலைக்காரகனான சுக்கிரனை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள் இரண்டு அம்சங்களையும் பெற்றிருப்பீர்கள். எத்தனை வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தாலும் எந்த ஒன்றையும் யோசிக்காமல் ஏற்க மாட்டீர்கள். எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதை அறிவு பூர்வமாக சந்தித்து வெளிவரக்கூடிய ஆற்றல் பெற்றவர் நீங்கள். 2022 ஏப்.13  முதல் உங்கள் நட்சத்திர அதிபதியான குரு அவருடைய வீடான மீனத்தில் 6ம் இடத்து குருவாக சஞ்சரிக்கிறார். மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்குவார். சிக்கல்களை உண்டாக்கி அதில் உங்களை சிக்க வைப்பாரா? நன்மைகளை வழங்கி முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவாரா? அல்லது, எல்லாம் அவன் செயல் என்று இறைமீது நம்பிக்கை வைத்து செயல்படுவீர்களா? என்பதை எல்லாம் பார்ப்போம்.

நிதி: தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் எதிர்பார்த்த இனங்களில் வருமானம் வரும். வங்கி வகையில் எதிர்பார்த்த நிதிஉதவி கிடைக்கும். கூட்டு வியாபாரங்களில் ஏமாற்றங்களே உண்டாகும். நிதி நிறுவன முதலீடுகளில் லாபம் உண்டாகும். அடமானத்தில் இருந்தவற்றை மீட்பீர்கள். எதிர்பாராத வருமானங்கள் உண்டாகி உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம்போல் குறுக்கு வழிகளிலும் வருமானம் வர வாய்ப்புண்டு.

குடும்பம்: குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது உங்கள் குடும்ப நிலையில் பொருத்தமாக அமையும். இதுவரை முயற்சிகள் மேற்கொண்டும் நிறைவேறாமல்  இருந்த காரியங்கள் இனி மள மளவென நடைபெற ஆரம்பிக்கும். மஞ்சள் நீராட்டு, திருமணம், குழந்தை பிறப்பு என்று சுப நிகழ்வுகளால் குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகி உறவு இனிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றித் தருவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களுடைய கல்வி என முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் என்பதால் உறவினர்கள் உங்களிடம்  பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  பெரியோர் ஆதரவால் உங்கள் குடும்ப நிலையில் முன்னேற்றம் தோன்றும்.

கல்வி: ஜென்ம கேது உங்களுக்கு கவனச்சிதைவையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவார்.
 தாய்வழி ஆதரவில் கல்வி பயில்வோர் நன்மை காண்பர். காமர்ஸ், ஆடிட்டிங், கணிதம், நிர்வாக மேலாண்மை, அக்கவுண்டன்சி மாணவர்கள் அதிக வளர்ச்சி காண்பர். வித்யாகாரகன் புதன் உங்கள் பாக்கியாதிபதி என்பதால் கல்வியியல், அறிவியல் பிரிவினரும் மேன்மை காண்பர் என்றாலும் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் உங்களை வளர வைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து முழு கவனத்தையும் கல்வியில் மட்டும் செலுத்துங்கள்.

பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். உறவினர்கள் வகையில் இருந்த பிரச்சனைகள் விலகும். வேலைக்கு செல்லும் பெண்களின் சிந்தனையில் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். மன ரீதியாக சில பாதிப்புகள் தோன்றினாலும் நட்பு வட்டத்தால் அதில் இருந்து மீள்வீர்கள். கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் வந்து போகும். உங்கள் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதிகபட்ச உழைப்பால் உடல் நிலையில் பாதிப்புகள் தோன்றும் நிலையும் உண்டு. தாய்வழி உறவுகள் வழியே சச்சரவுகள் உண்டாகலாம். 7ல் உள்ள ராகு தவறான உறவுகளுக்கு உங்களை ஆட்படுத்தலாம். மனதில் சஞ்சலத்தை உண்டாக்கி தடுமாற வைப்பார் என்பதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கை வேண்டும்.

உடல்நிலை: சுக ஸ்தானத்தில் சனி, ரோக ஸ்தானத்தில் குரு,  ஜென்மத்தில் கேது என்று சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சங்கடத்திற்கு மேல் சங்கடம் உண்டாகும். சுவாசக்கோளாறு, தொற்று நோய் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஒருசிலர் எதிர்பாராத விபத்துகளில் சிக்க நேரிடும். மனக்குழப்பம் டென்ஷனை உருவாக்கி அதற்கு சிகிச்சை பெற நேரிடலாம். சிலர் இனம் புரியாத நோய்களுக்கும் ஆளாவர் என்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஒய்வு உறக்கம் இரண்டிலும் அக்கறை கொள்ளுங்கள்.

தொழில்: குருவின் பார்வையில் தொழில் ஸ்தானம் இருப்பதால் உங்கள் சிறிய முயற்சிக்கும் கூடுதல் லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். கடந்த கால அனுபவம் கைகொடுக்கும்.  கூட்டாளிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும் உங்களுடைய கவனம் முழுவதுமாக அந்த தொழிலில் இருந்திட வேண்டும். வெளி மாநில, வெளிநாட்டு வகையிலான தொழில்களில் லாபம் அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் ஆதாயமடைவீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம் என்று மகிழ்வீர்கள். ஆனால், சில தவறான நபர்களால் உங்களுக்கு சிக்கல்கள் உண்டாகலாம். முறையற்ற வருமானத்தால் வேலையில் சிக்கல் உண்டாகவும் வாய்ப்புண்டு. தனியார் நிறுவனத்தில் பணி புரிவோர் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நன்மைகளைக் காண முடியும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை தினமும் மனதில் நினைத்து செயல்படுங்கள். குருவாக இருந்து உங்களை அவர் வழி நடத்துவார்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar