மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சீரடி சாய்பாபா கோவிலில், ராமநவமி விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த குட்டையூர் மாதேஸ்வரன் மலை அருகே, சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு ராமநவமி விழா நடந்தது. சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. விழா முன்னதாக சூர்யா மருத்துவமனையும், லோட்டஸ் கண் மருத்துவமனையும் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. அதைத்தொடர்ந்து சத்குரு சாய் சேவா சங்கத்தின் சார்பில், சிறப்பு பஜனை நடந்தது. இதில், ஏராளமான மக்கள் மருத்துவ முகாமிலும், பக்தர்கள் ராமநவமி விழாவிலும் பங்கேற்றனர். விழாவுக்கு அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் சுதர்சன், மகேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சூர்யா மருத்துவமனை டாக்டர்கள் சுதாகர், புவிதா ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது. லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.