பெருமாளை வலுக்கட்டாயமாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும் வினோத திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2022 10:04
வத்தலக்குண்டு: பக்தர்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்த பெருமாளை வலுக்கட்டாயமாக இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கும் பாரம்பரிய திருவிழா நடந்தது.
கோ. காமாட்சிபுரத்தில் சென்றாய பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நடந்தது. முதல் நாளில் பெருமாள் மலையில் இருந்து அழைத்துவரப்பட்டு, வாணவேடிக்கையுடன் ஊர்வலம் வந்தார். இரண்டாம் நாளில் தேவராட்டம், காவடிகளுடன் பலவித நிகழ்ச்சிகளுடன் வீதி உலா வந்தார். மூன்றாம் நாளில் பகலில் ராஜகம்பள சேவை விளையாட்டுகள் நடந்தது. ராஜ கம்பளத்து பெண்கள் பெருமாளுக்கு மஞ்சள் நீராடி மலைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விழாவில் மூன்று நாட்களும் பக்தர்களுடன் ஆடிப்பாடி பரவசமாக இருப்பதால் பெருமாள் மலைக்கு செல்ல அடம் பிடிப்பது வழக்கம். இருப்பிடம் செல்லாத பெருமாளை, ராஜ கம்பளத்தார் வழுக்கட்டாயமாக அவரது இருப்பிடத்திற்கு அனுப்பி வைப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. பூச்சப்பரம் முழுவதும் மரிக்கொழுந்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.