செஞ்சி : செஞ்சி முல்லை நகர் அருட்பிரகாச வள்ளலார் கோவில் 8ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6 மணிக்கு ஜோதி வழிபாடும், அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சன்மார்க்க கொடியேற்றுதலும் நடந்தது. காலை 8 மணிக்கு இசை குழுவினருடன் வள்ளலார் வீதி உலாவும், பகல் 12 மணிக்கு சன்மார்க்க சொற்பொழிவும், 1 மணிக்கு சர்வமத பஜனையும், தொடர்ந்து ஆலம்பூண்டி வள்ளலார் கொள்கை நெறி பரப்பு இயக்கம் சார்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடந்தது. அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை அருட்பெருஞ்ஜோதி மன்றம், சன்மார்க்க சங்கம் மற்றும் முல்லை நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.