பதிவு செய்த நாள்
15
ஏப்
2022
11:04
மிருகசீரிடம் 3,4 பாதம் " தங்கள் தோரணையில் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் வல்லமை உடைய உங்களுக்கு இந்த புத்தாண்டில் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம்.
பயண சுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க
நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில்
இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன்
பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வழிபட்டு வாருங்கள்.
திருவாதிரை
மற்றவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ளும் குணமுடைய உங்களுக்கு இந்த புத்தாண்டில் பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் சஞ்சாரத்தால் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண் பகை உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில்
வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம்
இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் முயற்சிகளுக்கு
உறுதுணையாக இருப்பீர்கள். பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு ராசிநாதன் புதனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். மாணவர்களுக்கு நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
பரிகாரம்: பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும்.
.
புனர்பூசம் - 1, 2, 3 பாதம்
நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டில் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வாகனம், வீடு ஆகியவற்றால் சுபச்செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வர பொன் பொருள் சேரும்.