திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே என்.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர் பைரவர் கோயிலில் கும்பாபிஷேகத்தை அடுத்து மண்டலாபிஷேகம் நிறைவுற்றது
என்.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர் மற்றும் பைரவர் கோயிலில் திருப்பணி நடந்து, மார்ச் 6 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினசரி மண்டலாபிஷேக மண்டல பூஜை நடந்து வந்தது. நேற்று 48 ஆவது நாளைமுன்னிட்டு நிறைவுநாளை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு புனித கலசங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகள் நடத்தினர். பின்னர் பூர்ணாகுதியுடன் தீபாராதனை நடந்தது. அடுத்து புனித கலசங்கள் புறப்பாடு ஆகி மூலவர் விநாயகருக்கும் பைரவருக்கும் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேக மலரை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டார். ஏற்பாட்டினை அரிபுரம் யோகி குல பண்டாராத்தார் செய்தனர்.