ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுாரில் வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆதிகேசவர் பிரமோற்சவ விழா 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை, மாலை வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவின் ஏழாவது நாளான நேற்று தேர் திருவிழா நடந்தது.தேரில் ஆதிகேசவர் எழுந்தருளி தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கையாழ்வார் சாலை வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.