முத்து மாரியம்மன் கோவில் திருவிழா: பறவைக் காவடி, பால்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2022 01:04
கூடலூர்: கூடலூர், கீழ்நாடுகாணி முத்து மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 20ம் தேதி அதிகலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 21ம் தேதி, அதிகாலை அம்மன் கரகம் ஆற்றில் இருந்து கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. மாலை 6:30 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. நேற்று, பகல் 12:30 மணிக்கு குடோன் அருகே உள்ள, தடுப்பணையில் இருந்து பரவகாவடி ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில், பக்தர்கள் பரவகாவடி, வேல் குத்தியும் பால்குடம் ஏடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். இரவு, தேர் ஊர்வலம் நடந்தது. இன்று காலை முதல் சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து மாவிளக்கு பூஜையும்; நாளை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.