காரைக்கால்: காரைக்காலில் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் அம்மையாரின் கணவரிடம் சிவபெருமாள் மாங்கனி கொடுத்து அனுப்பு நிகழ்ச்சி அப்போது அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும். இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும். அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கையால் நடந்து செல்லுவது சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா மிகவிமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூலை 10ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும். 11ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், ஜூலை 12ம் தேதி அபிேஷகம்,விழாவில் முக்கிய நிகழ்ச்சி ஜூலை13ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வருதல் அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் பைபவம் நடக்கிறது. அன்று மாலை அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று அம்மையார் சன்னதி வளாகத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்,அறங்காவலர் வாரிய தலைவர் வெற்றிச்செல்வம், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.