காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு சிவகாமி அம்மன் சமேத சிவலோகநாத கோவிலில் பரிவார ஆலயம் செல்வ விநாயகர் உள்ளிட்ட அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காரைக்கால் தலத்தெரு சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தானம் சார்பில் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செல்வ விநாயகர், பிடாரி அம்மன், முள்ளியம்மன், விஜய வலம்புரி விநாயகர் உள்ளிட்ட ஆலயங்களுக்கு மிகவிமர்ச்சியாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 27ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை.கணபதி, நவகிரக பூஜைகளுடன் தொடங்கியது. இன்று நான்காமம் காலயாகசாலை பூஜைகள் முடிந்து அனைத்து விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ.,திருமுருகன்,காங்.,கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்