ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ரங்கநாதர் நட்சத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2022 09:04
ஸ்ரீவில்லிபுத்தூ: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ரங்கநாதர் அவதார தினமான சித்திரை ரேவதி நட்சத்திர தினவிழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு ரேவதி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு, ரகுராமபட்டர் பூஜைகள் செய்தார். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், மணியம் கோபி, பட்டர்கள் பங்கேற்றனர்.