விருதுநகர்: விருதுநகர் சிவகணேசன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யபூஜை, கணபதி ஹோமம், முதல் யாக பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று இரண்டாம் கால யாக பூஜை நடத்தப்பட்டு காலை 9:30 மணிக்கும் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவகணேசன் சுவாமி சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.