திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் ரத ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2022 10:04
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தபெருவிழாவை முன்னி்ட்டு ரத ஊர்வலம் நடக்கிறது. இக்கோயிலில் வசந்தப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறுகிறது. ஏப்.,22 ல் காப்புக் கட்டி விழா துவங்கியது. தினசரி இ ரவில் அம்பாள் திருக்குள பவனி நடைபெறுகிறது. இன்று 9ம் திருநாளில் மாலை 6:30 மணிக்கு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ரத ஊர்வலம் நடக்கிறது. நாளை காலை 7:00 மணிக்கு தீர்த்தவாரியும், மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. காலை 7:35 மணிக்கு 250 பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுகின்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவு 7:00 மணிக்கு கோயில் குளத்தில் தெப்பம் நடைபெற்று, இரவு 9:00 மணிக்கு காப்பு களைதலுடன் விழா நிறைவடைகிறது.