பழநி: பழநியில் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பழநியில் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வருகை புரிந்தனா. பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்குச் சென்றனர். பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.